புதினங்களின் சங்கமம்

வடமராட்சி இந்திரவிழாவில் புலிகளின் புரட்சிப் பாடல்களைப் பாடிய மேள, நாதஸ்வரம் வித்துவான்களுக்கு நடந்த கதி!!

தமிழீழ விடுதலை புலிகளின் பாடல்களை பாடிய நாதஸ்வர, தவில் வித்துவான்களுக்கு விசாரணை..

வல்வெட்டித்துறை முத்துமாாி அம்மன் ஆலய மஹோட்சபத்தில் தமிழீழ விடுதலை புலிகளின்
எழுச்சிப் பாடல்களை பாடிய நாதஸ்வர, தவில் வித்துவான்களை விசாரணைக்கு வருமாறு
பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் அழைப்பு விடுத்துள்ளனா்.

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா
நடைபெற்றிருந்த நிலையில் நேற்று தீர்த்தத் திருவிழா மற்றும் இந்திர விழாவுடன்
கொடியிறக்கம் நடைபெற்றது.குறித்த ஆலயத்தில் சப்பரம்,

தேர் உள்ளிட்ட பெரும் விழாக்களின் போது தவில் நாதஸ்வரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின்
எழுச்சிப் பாடல்களை இசையாக மீட்டினார்கள் என தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.