விபத்தில் பலியான மாணவனின் இறுதி நிகழ்வில் கண்ணீர் சிந்த வைத்த சாதனை விருதுகள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேளை பூநகரி பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த மோகன் ஆஹாஸின் இறுதி நிகழ்வில் அவர் வென்றெடுத்த சாதனை விருதுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை அங்கு சென்ற அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளன.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனான ஆஹாஸ் கல்லூரிக்காலத்திலேயே விளைாயட்டுத் துறையில் பல்வேறு வெற்றிகளுக்கு சொந்தக்காரராக திகழ்ந்திருந்தார். மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு சென்ற பின்னரும் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தனிப்பட்ட ரீதியிலும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் அவர் சாதனையாளராக திகழ்ந்திருக்கின்றார்.

ரேபிள் ரென்னிஸ், கிரிக்கெட் உட்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டி பல்வேறு சாதனைகளை ஈட்டி பெற்றுக்கொண்ட விருதுகள், வெற்றிக்கேடயங்கள் அவருடைய வீட்டில் நடைபெறுகின்ற இறுதி நிகழ்வில் வைக்கப்பட்டு அவருடைய உருவத்தோற்றத்தை உடைய உருவப்படமும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அவரின் தாய் தந்தையருக்கு ஒரே ஒரு மகனான அவரின் உருவப்படமும் சாதனை விருதுகளும் காண்போரை கண்கலங்க வைத்தன.

இறுதி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.

error

Enjoy this blog? Please spread the word :)