புதினங்களின் சங்கமம்

ரணிலின் இல்லத்திற்கு திடீரென சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள்!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீரென சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இவ்வாறு குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் ரணிலின் இல்லத்திற்கு சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு, சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு அமையவே குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.