யாழ் வடமராட்சியில் சுமந்திரன், சிறிதரனின் உருவப் பொம்மைகள் எரிப்பு!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் ஆகியோரின் ஒளிப்படங்களுடன் கூடிய உருவ பொம்மைகளை எரிக்கின்ற காணொளிக் காட்சிகள் இணையத்தளங்கள் ஊடாக பரவி வருகின்றன.
குறித்த சம்பவம் வடமராட்சி கிழக்கின் முள்ளி என்ற பகுதியில் இடம்பெற்றதாக சொல்லப்படுகின்றது.
முகங்களை முற்றாக மூடி மறைத்த ஐவர் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

