கிளிநொச்சியில் வள்ளி, தெய்வானை, வேலுடன் காணாமல் போன முருகன்! (Photos)!
கிளிநொச்சி, விவேகானந்தநகர் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் கருவறையில் இருந்த வேல் மற்றும் எழுந்தருளும் சுவாமி முருகன், வள்ளி தெய்வானை சிலைகள் என்பன திருடப்பட்டுள்ளன.
கடந்த 24ம் திகதி இரவு ஆலயத்தின் கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டு உள்ளிறங்கித் திருடப்பட்டுள்ளது. சிலைகளுடன் ஆலயத்தின் பயன்பாட்டில் உள்ள பல பொருட்களும் திருடிச் செல்லப்பட்டுள்ளன. சுமார் பத்து இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் திருப்பட்டுள்ளன என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு பொலிஸ் தடயவியல் பிரிவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





