புதினங்களின் சங்கமம்

கொரோனா வைரஸ் உடலின் முக்கிய உறுப்புகளை தாக்கி தீவிர அழற்சியை ஏற்படுத்தும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அதில் இருந்து மீண்டாலும் உடலின் முக்கிய உறுப்புகளை தாக்கி தீவிர அழற்சியை ஏற்படுத்துவதன் ஊடாக மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்க் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடி விளைவுகளை விட நீண்ட கால நீண்ட கால விளைவுகள் மோசமானதாக இருக்கும் என மருத்துவர்கள் மற்றும் தொற்று நோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளுக்கு பெரும்பாலும் ஏற்படும் சுவாச கோளாறுகளைத் தவிர உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் இது பாரிய சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது எனவும் அவா்கள் கூறுகின்றனா்.

இது ஒரு சுவாச நோயை ஏற்படுத்தும் வைரஸ் மட்டுமே. பாதிக்கப்பட்டவா்கள் விரைவில் சாதாரண நிலைக்குத் திரும்பிவிடுவாா்கள் என நாங்கள் ஆரம்பத்தில் கருதினோம்.

ஆனால் இது இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளுக்கும் ஊறு விளைவிக்கிறது. ஆரம்பத்தில் நாங்கள் இது குறித்துக் கவனம் செலுத்தவில்லை. ஆனால் இப்போது இதனை தீவிரமாக அவதானித்து வருகிறோம் என கலிபோர்னியாவின் லா ஜொல்லாவில் உள்ள இருதயநோய் நிபுணா் மருத்துவர் எரிக் டோபோல் கூறினார்.

சுவாசக் கோளாறுக்கு மேலதிகமாக சில கொரோனா நோயாளிகள் பக்கவாதம் ஏற்படக்கூடிய இரத்த உறைவு கோளாறால் பாதிக்கப்படுகின்றனா்.

மேலும் சிலருக்கு உறுப்புக்களைத் தாக்கும் தீவிர அழற்சி ஏற்படக்கூடும். அத்துடன் தலைவலி, தலைச்சுற்று, சுவை அல்லது வாசனை இழப்பு, வலிப்பு போன்ற ஊபாதைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு நரம்பியல் சிக்கல்களையும் இந்த வைரஸ் ஏற்படுத்தும்.

கோவிட் -19 தொற்று நோயின் பரந்த மற்றும் மாறுபட்ட விளைவுகள் ஓரளவு தனித்துவமானவை என சிகாகோவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் இருதயநோய் நிபுணர் மருத்துவர் சதியா கான் கூறினார்.

இதய நோய் உள்ளிட்ட பிற பாதிப்புக்களுடன் ஏற்கனவே உள்ளவா்களுக்கு இதனால் கூடுதல் ஆபத்து உள்ளது எனவும் மருத்துவர் கான் கூறினார்.

கோவிட்-19 இல் இருந்து ஒருவா் மீண்டு வந்தாலும் கூட அதன் பின்னா் பாரிய மருத்துவச் செலவுகள் மற்றும் பிற பாதிப்புக்கள் இருக்கலாம் எனவும் இருதயநோய் நிபுணர் மருத்துவர் சதியா கான் தெரிவித்தார்.