காஞ்சோண்டி ( Urtica Dioica ) (இது நகல் பதிவு)

எமது நாட்டில் இது ஒரு பற்றைத் தாவரம் . உடலில் பட்டால் சுணைக்கும் . இத் தாவரத்தை எமது காணிகளில் கண்டால் அவற்றை வெட்டி எறிந்துவிடுவார்கள் .
ஒருதடவை இங்குள்ள மருந்துக் கடையொன்றில் காஞ்சோண்டி தேயிலை கண்டேன் . இச் செடி பற்றி எழுதப் பட்டிருந்தவைகளை கூகிளில் தேடி படித்த போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இத் தாவரம் பற்றி எழுதும் போது ” The Doctor ´s medicin ” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

1800 ம் ஆண்டுகளில்( இருந்து) மிகவும் முக்கியமான வைத்திய நிவாரணியாக இத் தாவரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத் தாவரம் விட்டமின் A , விட்டமின் C , கல்சியம்,
பொஸ்பரஸ் , இரும்புச் சத்து , கலியம் போன்றவற்றை அதிக அளவில் கொண்டுள்ளது.
இதைவிட முக்கியமாக உடலின் உள்ளே உள்ள உறுப்புக்களில் தொற்றுக்கள் / நோய்கள் ஏற்படும் போது அக் கிருமிகளை அழிக்கக் கூடிய ” Flavonoids ”
எனப்படும் சத்தையும் இது அதிக அளவில் கொண்டுள்ளது.

தாவரத்தை சுடுநீரில் கழுவும் போது இதன் சுணைக்கும் தன்மை அகன்றுவிடும்.

இதன் மருத்துவ பயன்கள் :

உள் உறுப்புக்களில் நோய் / நாட்பட்ட உட்காயங்களை இல்லாமல் செய்ய உதவுகின்றது.

சலப் பையில் கற்கள் உருவாகுவதை / உருவாகியுள்ள கற்களை அழிக்கக் கூடியது .

இருமல் / நாட்பட்ட இருமல் தீர்க்கும் நிவாரணியாகின்றது

இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க கூடியது.

உடம்பிலுள்ள மேலதிக நீரை ( உ +ம் : கால் வீக்கம் ) வெளியேற்ற உதவுகின்றது.

இரத்த அழுத்தத்தை சரி செய்கின்றது.

இரத்தத்தைச் சுத்திகரித்து தேவையற்ற கழிவுநீரை வெளியேற்ற உதவுகின்றது .

வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகின்றது.

குழந்தை பெற்ற பால் கொடுக்கும் பெண்களிற்கு பால் ஊறுவதற்கு உதவுகின்றது.

தலை முடி உதிர்வதை தடை செய்கின்றது.

தோலில் ஏற்படும் படைகள் – Eczema மீது இவ் இலையை அரைத்துப் பூசி வர நோய் குணமாகும்.

பாவிக்கும் முறைகள் :

இலைகளை / மரத்தை வெயிலில் காயவைத்து தேநீர் செய்து குடிக்கலாம் . ( கிறீன் டீயின் சுவையை ஒத்தது )

இலைகளை கீரையுடன் /தனியாக கறி செய்யலாம்.

வேறுவகை இலைகளுடன் சேர்த்து வறை செய்யலாம்.

சூப் அல்லது இரசம் செய்யும் போது இவ் இலைகளையும் சேர்த்து செய்யலாம்.

இலைகளை சிறிது தண்ணீரில் அவித்து, அரைத்து தலைக்கு வைத்து முழுகலாம்.

ஒலிவ் / தேங்காய் எண்ணையுடன் சேர்த்து இவ் இலைகளைக் கொதிக்க வைத்த எண்ணையை தலைக்கும் , உடம்புக்கும் பூசலாம்.

இன்னும் பல …..

இயற்கை தந்திருக்கும் செலவில்லா மருந்து இது.

நீங்களும் பயன் பெறவே இப்பதிவு.

ஆதாரம் :

Net doctor .dk
WWW.meditativyoga.net
da.1 faydalari.com

error

Enjoy this blog? Please spread the word :)