புதினங்களின் சங்கமம்

கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலி!!

கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் சிறுவன் உள்ளிட்ட நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, வத்தள திக்கோவிட்ட கடற் பரப்பில் நேற்று (ஜூன்-20) மாலை ஓரே குடும்பத்தைச் சேர்நத 5 பேர் நீராடிய நிலையில் அவர்கள் கடல் அலையில் சிக்கி மூழ்கியுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதி வாசிகள், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கடலில் மூழ்கிய நான்கு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் உள்ளிட்ட ஐவரையும் மீட்டு றாகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூன்று பெண்களும் சிறுவனும் உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய பெண் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 14 வயது சிறுவனும், 16 வயது சிறுமியும், 20 மற்றும் 30 வயதுடைய இரு பெண்களும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு பெண் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களது சடலங்கள் றாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து வத்தளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.