புதினங்களின் சங்கமம்

பல லட்சம் மோசடி செய்த விதானை!! பின்னணியில் யார்?

பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு கிராம சேவகர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் மக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகராக பல வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் S.கேதீஸ்வரன் என்ற கிராம சேவகர்.

இவர் இப்பகுதியில் கிராம சேவகராக கடமையேற்றுக்கொண்ட நாட்களிலிருந்து இந்த பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் முக்கியமாக அரச காணிகளை இப்பகுதியிலிருக்கும் செல்வந்தர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு காடுகளை வெட்ட விட்டதுடன் அந்த காணிக்கான அனுமதி பத்திரங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அத்துடன் பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குள் இடம்பெறும் வீதி அமைத்தல், கட்டடங்கள் அமைத்தல் போன்ற ஒப்பந்த வேலைகளை இப்பகுதியிலுள்ள பொது அமைப்புக்களின் நிர்வாகத்தினர் சிலருக்கு பணம் கொடுத்து அவர்களின் ஒத்துழைப்புடன் தனது பினாமிகள் மூலம் சீரற்ற முறையில் செய்து அதிக லாபத்தை சம்பாதித்து வருகின்றார்.

மேலும் இந்த கிராம சேவகருக்கு நெருக்கமான ஒருவர் வைத்திருக்கும் JCB இயந்திரத்தைத்தான் இப்பகுதியில் காணி வெட்டுபவர்கள் பயன்படுத்த வேண்டும் அப்படி பயன்படுத்துபவர்கள் எவ்வளவு காடுகளை வேண்டுமென்றாலும் எந்த அனுமதியுமில்லாமல் வெட்டி தள்ளலாம் வேறொருவருக்கு சொந்தமான JCB இயந்திரத்தை இந்த மக்கள் வாடகைக்கு அமர்த்தி சொந்தக்காணியை துப்பரவு செய்தாலும் சட்டத்தின் உதவியுடன் தடங்களை ஏற்படுத்துவார் இந்த கேதீஸ்வரன்.

இது தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடுகள் மடு பிரதேச செயலாளருக்கு கொடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் இந்த குற்றச்சாட்டுகள்,உறுதிப்படுத்தப்பட்டுகிராம சேவகர் வேலையில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது இந்த கேதீஸ்வரன் மடு பிரதேச செயலாளரின் காலில் விழுந்து நான் ஒரு விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி என்னை வேலையிலிருந்து தூக்கினால் விடுதலைப்புலிகள் அமைப்பின் வளர்ப்பு தவறாக போயிடும், எனது குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என அழுதுபுலம்பி மன்னிப்பு கேட்டார் அப்போதும் குறித்த பிரதேச செயலாளர் இரங்கவில்லை இருந்தும் தற்போது பதவி வகிக்கும் மன்னார் மாவட்ட செயலாளரின் தலையீட்டில் குறித்த பிரச்சனை முடக்கப்பட்டதாக தெரியவருகிறது. மேலும் மன்னார் மாவட்ட செயலாளருக்கும், கிராம சேவகர் கேதீஸ்வரனுக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் நடைபெற்றதாகவும் பின்னாளில் மக்களால் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதவிர தற்போதை கொரோனா காலங்களில் தொண்டு நிறுவனங்களால், தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட நிவாரண பொதிகளை மக்களுக்கு வழங்காது தானே கடைகளில் விற்பனை செய்தது.

மேலும் அரசால் வழங்கப்பட்டு வரும் குடும்பத்திற்கு 5000 ரூபாய் நிதிகள் உரிய முறையில் வழங்காது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பலவேறு குற்றச்சாட்டுகள் அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கோத்தாபய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அரச அதிகாரிகளின் ஒழுக்கம் மற்றும் சேவை தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்திருக்கிறோம் என தம்மட்டம் அடித்துக்கொள்ளுகிறார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட கிராம சேவகர்கள், அரச அதிகாரிகள் பலர் இந்த சமூகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மக்கள் வரிப்பணங்களை கொள்ளையடுத்து வருகின்றார்கள்,

மக்கள் அதில் ஒருவரான S.கேதீஸ்வரன் அவர்களை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள், இவர் மீது உரிய விசாரணைகளை மேற்கொண்டு இவரை இந்த பதவியிலிருந்து நீக்கி மக்களுக்கு இந்த அரசின் மீதும், அரச அதிகாரிகள் மீதும் நம்பிக்கை ஏற்படவேணுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.