புதினங்களின் சங்கமம்

யாழ். தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ். விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்க கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி விடுத்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று 20பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 3 பேர்.

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 4 பேர்.

பொது வைத்தியசாலை வவுனியா – ஒருவர்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக பிரிவு -11 பேர்.

தனிமைப்படுத்தல் மையம் விடத்தைபளை – ஒருவர்.

இவ்வாறு 20 பேரின் மதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.