புதினங்களின் சங்கமம்

யாழ் பருத்தித்துறையில் வந்திறங்கிய சிங்கள மீனவர்களால் பதற்றம்!

வட தமிழீழம், யாழ், பருத்தித்துறை கொட்டடி கடற்கரைப் பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் ஒரு தொகுதியினர் வந்திறங்கிய மையினால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக நேரத்தைக் கழிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த குறித்த கடற்கரையில் எந்தவொரு அனுமதியும் பொறாமல் கடலட்டை பிடிப்பதற்காக பெருமளவு சிங்கள மீனவர்கள் வந்திறங்கியதுடன், பூசை வழிபாடுகளை நடாத்தி தொழிலுக்கான ஆயத்தப் பணிகளைச் செய்துள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் குழப்பமடைந்துள்ள போதும் கடற்றொழிலாளர் சங்கங்கள் தொடர்ச்சியாக அமைதியாக இருந்து வருகின்றனர்.