புதினங்களின் சங்கமம்

யாழில் துாக்குத்தண்டனை நிறைவேற்றும் அளவுக்கு போதைப் பொருள் கடத்திய பெண் கைது!! பரபரப்புத் தகவல்கள் இதோ!!

உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் உடமையிலிருந்து 50 கிராம் 300 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம் பொலிஸார், குடாநாட்டில் கைப்பற்றப்பட்ட மிகப் பெரும் தொகை ஹெரோயின் இதுவென்றும் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான 42 வயதுப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் நேற்று புதன்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பூம்புகார் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது , அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டர் சைக்கிளில் ஒன்றில் வைத்தியசாலை ஊழியர்கள் போன்று மருத்துவ குறியீட்டு ஸ்ரிக்கர் ஒட்டியவாறு பயணித்த பெண்ணை மறித்து சோதனையிட்ட போதே போதை பொருளை அவரது உடமையில் இருந்து கைப்பற்றப்பட்டது.

அந்தப் பெண்ணுக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபருக்கும் இடையில் தொடர்பிருப்பதும் பொலிஸாரினால் கண்டறியப்படுள்ளது.

சந்தேக நபர் இன்று மாலை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் கூறினர்.

இதேவேளை, பெண் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கத் தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.