புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தை மீண்டும் மிரட்டும் கொரோனா! முடங்குகிறது இணுவில்?

யாழ்ப்பாணம் இணுவிலில் இருந்து நாடு திரும்பிய இந்திய வர்த்தகர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நாளை இணுவில் கிராமத்தினை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.

அண்மையில் இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களை அந்நாட்டு அரசு கப்பல் மூலம் தமது நாட்டிற்கு அழைத்திருந்தது.

அவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக இன்று மாலை தகவல்கள்வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த நபருக்கான தொற்றுத் தொடர்பிலான தகவல்களைப் பெறுவதற்கு சுகாதாரத் திணைக்களம் இந்தியத் தூதரகத்தின் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.

இதேவேளை அவர் தங்கியிருந்ததாக கூறப்படும் இணுவில் கிராமத்தினையோ அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளையோ தனிமைப்படுத்துவதற்கான முனைப்புக்கள் இடம்பெற்றுவருவதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் தனிமைப்படுத்தல் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.