புதினங்களின் சங்கமம்

வீரியத்தை இழந்துவரும் கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் அதன் ஆற்றலை இழந்து வருகிறது. இதனால் ஏற்படும் மரணங்களும் மிகவும் குறைந்துள்ளன என இத்தாலியின் சிரேஷ்ட மருத்துவர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டுள்ள லோம்பார்டியின் வடக்கு பிராந்தியமான மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்டோ ஜாங்ரில்லோ இவ்வாறு கூறியுள்ளாா்.

கொரோனா வைரஸ் தொடா்ந்தும் ஆற்றலுடன் இத்தாலியில் இருக்காது என்பதே மருத்துவ ரீதியான நிதா்சனம் என அவா் குறிப்பிட்டாா்.

கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி இத்தாலியில் தொற்று நோய் பரவல் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 33,415 பேர் அங்கு இறந்துள்ளனர். உலகில் மூன்றாவது அதிக இறப்புக்களைக் கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. சுமாா் 2 இலட்சத்து 33 ஆயிரத்து 19 போ் நேற்றுவரை அங்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டு்ளனா். உலகளாவிய ரீதியில் தொற்று அதிக தொற்று நோயாளா்கள் பதிவாக நாடுகள் வரிசையில் இத்தாலி ஆறாவது இடத்தில் உள்ளது.

எனினும் மே மாதம் முதல் அங்கு புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் படிப்படியாக வீழ்ச்சியடைந்துள்ளன. இப்போது இத்தாலியில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன.

எனினும் தொற்று நோயின் இரண்டாவது அலை குறித்து சில வல்லுநர்கள் எச்சரித்துள்ளனா். ஆனால் கொரோனா அதன் வீரியத்தை இழந்து வருவதாக இத்தாலி சிரேஷ்ட மருத்துவா் கருத்து வெளியிட்டுள்ளாா்.

இதேவேளை, வைரஸ் அச்சுறுத்தல் இனி இல்லை என விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்படவில்லை. அது குறித்த ஆய்வுகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. எனவே, இத்தாலியர்களை குழப்பக் கூடாது என இத்தாலிய சுகாதார அமைச்சின் துணை செயலாளரான சாண்ட்ரா ஜாம்பா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகபட்ச எச்சரிக்கையுடன் சமூக இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். அதிகளவில் ஒன்றுகூடுவதைத் தவிா்க்க வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவுவதுடன், முக கவசங்களை அணிந்துகொள்ளுமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில் வடக்கு இத்தாலியின் ஜெனோவா நகரில் உள்ள சான் மார்டினோ மருத்துவமனையின் தொற்று நோய்கள் பிரிவின் தலைவர் மேட்டியோ பாசெட்டி வைரஸ் பலவீனமடைந்து வருவதை உணா்வதாக ANSA என்ற செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளாா்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் இருந்த வலிமையுடன் இப்போது இல்லை எனவும் அவா் கூறியுள்ளாா்.