புதினங்களின் சங்கமம்

ஏ9 வீதியில் யானை தாக்கியதில் தந்தையும் மகளும் காயம்!!

மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் யானை தாக்கி இருவர் காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியையே வீதியோரத்தில் நின்ற யானை தாக்கியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் காயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது.