புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாண ரேகா ஜேர்மனியில் இறந்தது எதனால்?? குடும்பத்தினரின் விளக்கம் இதோ!!

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ஜேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.றேகன் பிரியா(வயது 25) என்பவர் கடந்த ஜனவரி 9ம் திகதி ஏற்பட்ட வயிற்றுவலி மற்றும் வாந்திபேதி காரணத்தினால் நிறைமாத கற்பணியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையை சிசேரியன் முறையில் வெளியெடுக்காமல், குடலில் பிணைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி அற்கான சத்திர சிகிச்சையினை மேற்கொண்ட வைத்தியர்கள் பின்னர் குழந்தைக்கும் தாயிற்கும் சுவாசம் தடைப்படவே ஜனவரி 10ம் திகதி (ஆண்)குழந்தையை சிசேரியன் முறையில் பிரசவிக்க வைத்துள்ளனர். முதலில் குழந்தையை பிரசவிக்க வைக்காமல் மேற்படி சத்திர சிகிச்சையை மேற்கொண்டமை இது அந் நாட்டு வைத்தியர்களின் அசமந்தப்போக்கினையே சுட்டிக்காட்டுகின்றது.
அதன் பின்னர் தொடர்ச்சியாக தாயிற்கு சுவாசப் பிரச்சனை காரணமாக கோமா நிலைக்கு சென்றதுடன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வேறு வைத்தியசாலைக்கும் இடம் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று நோயினை கண்டு பிடிக்காத நிலையில் மேலும் மேலும் பல சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த மே மாதம் 20ம் திகதி சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். அத்துடன் நோயிற்கான காரணம் இதுவரையில் வைத்தியர்களினால் கண்டு பிடிக்கப்படாமை வேதனைக்குரிய விடயம் என்பதுடன் மேற்படி நாட்டில் இடம் பெற்ற இச்சம்பவம் கவலைக்கிடமே.
ஆரோக்கியமாக வாழ்ந்த நபரிற்கு, வளர்ச்சியடைந்த ஜேர்மன் நாட்டில் இவ்வாறு நோய் கண்டு பிடிக்கப்படாத நிலையில் மரணமடைந்தமை வைத்தியர்கள் மீது சந்தேகத்தையே ஏற்படுத்தி நிற்கின்றது.
மேலும் இவருக்கு கடந்த வருடமே திருமணம் நடைபெற்றதுடன் 1ம் ஆண்டு திருமண நாள் அன்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது ஆண் குழந்தைக்கு தற்போது 4 1/2 மாதங்கள் நிறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே ஊடகங்கள் சரியான தகவல்களை உறவினர்களிடம் பெற்று வலைத்தளங்களில் பதிவிடுமாறு தயவாய் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். இதுவரையில் செய்தி வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறானது என்பதனை அறியத் தருகின்றோம்.

தகவல் :- குடும்ப உறவினர்கள்.
தொடர்புக்கு:- 004915229913078, 0094766407491