முகமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்பு!
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலைப் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களே குறித்த எலும்புக்கூடுகளை கண்ணுற்றிருக்கின்றனர்.
இன்று முற்பகல் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
குறித்த பகுதிகளில் நீண்டகாலமாக கடும் போர் இடம்பெற்றுவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

