வடமராட்சியில் நேற்றும் கோஷ்டி மோதல்; மூவர் வாள்வெட்டில் படுகாயம்: ஒருவர் கைது!
வடமராட்சி, மலுசந்தி, அத்தாயக் கிராமத்தில் நேற்றும் கோஷ்டி மோதல், வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மூவர் வாள் வெட்டக்கு இலக்காகினர். சந்தேகத்தில் ஒருவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்தனர்.
பின்னணி
வடமராட்சி, மலுசந்தி, அத்தாயக் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் முறுக்கி அதிக ஒலி எழுப்பியதால் அதை தட்டிக்கேட்ட முதியவர் நேற்று தாக்கப்பட்டார்.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு கூடிய இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பல வீடுகளுக்கு கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் பல வீடுகள் சேதமாகின.
இந்த நிலையில் இன்று மாலை சுமார் 100 பேர் வரையானோர் மீண்டும் மோதிக் கொண்டனர், இதில் மூவர் வாள் வெட்டுத் தாக்குதலுக்குள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
ஒருவரை சம்பவ இடத்தில் நெல்லியடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்றும் ஊரடங்கு அமுலில் இருந்தவேளை இரண்டு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது, இதில் கொட்டன், வாள்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன, இதன் போதே மூவர் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

