கொரோனா; மூலிகையில் மருந்து தயாரித்த முல்லைத்தீவுப் பெண்?! (காணொளி)
வலைத்தளம் ஒன்றில் வந்த தகவலை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்காக மூலிகைச் செடிகளைப் பயன்படுத்தி மருந்துப் பொருள் ஒன்றினை முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட புதிய குடியிருப்பு பகுதியில் வாழும் பிரபல தொழில் முயற்சியாளரான சாயிராணி என்பவர் மூலிகைகளை மட்டும் உள்ளடக்கியதாக குறித்த வில்லைகளைத் தயாரித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இந்நிலையில் இன்று குறித்த உற்பத்தி தொடர்பில் மாவட்டச் செயலர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்ட நிலையில் அவர்களுக்கு இது தொடர்பில் விளக்கமளித்த அவர் உற்பத்தி தொடர்பில் பிராந்திய செய்தியாளருக்கும் கருத்துத் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த மருந்தினை ஆயுர்வேத மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.

