பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றொருவருக்கும் கொரோனாத் தொற்று!
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து கொரோனா சந்தேகத்தில் அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனைக் கூடத்தில் குறித்த நோய்த் தொற்றுக் குறித்த உறுதிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்திருப்பதாவது,
06.05.2020. 10.30 pm. ( புதன்கிழமை)
இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. (பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர்)
இன்று 68 பேருக்கான பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் ( Teaching Hospital) ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 8 பேர்.
* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு – 3 பேர்.
* பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் – 45 பேர்.
* யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் – 9 பேர்.
* நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர்.
* சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர்
* ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை – ஒருவர்.

