யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று தொடர்பிலான PCR பரிசோதனை இன்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 80 பேருக்கு குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என 80 பேரின் மாதிரிகள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஆய்வு கூடத்திலும் கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





