கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ச பத்திரிகையாளா் திடீா் மரணம்!
வங்காளதேசத்தில் பிரபல பத்திரிகையின் முதன்மை செய்தியாளர் ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு டாக்கா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிக்கலாம். அதுவே மரணத்துக்கான காரணமாக இருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பில் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
டெய்லி சமோயர் என்ற பத்திரிகையில் நகர ஆசிரியரும், பத்திரிகையின் தலைமை செய்தியாளராகவும் பணியாற்றி வந்த 47 வயதான ஹுமாயூன் கபீர் கோகன் என்பவரே உயிரிழந்தவராவார்.
சுவாசப் பிரச்சனை மற்றும் தலைவலி உள்ளிட்ட உபாதைகளுடன் டாக்கா நகரின் உத்தரா பகுதியில் உள்ள ரீஜன்ட் மருத்துவமனையில் இவா் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இரவு 10.15 மணியளவில் அவர் இறந்ததாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எம்.டி.ஷேத் கூறினார்.
அவர் ஏற்கெனவே ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம், ஆனால் நோயைக் கண்டறிவதற்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டார் என்று ஷேத் கூறினார்.

