புதினங்களின் சங்கமம்

95 கடற்படையினருக்கு கொரோனா தொற்று!! இலங்கையில் தற்போதைய கொரோனா நோயாளர் எண்ணிக்கை இதோ!!

இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 120 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.