புதினங்களின் சங்கமம்

யாழில் சாராய ராசாக்களின் அடக்க முடியாத ஆசை!! ஆட்டோவுடன் கைது!!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பியர் டின்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்தோடு இச்சம்பவம் தொடர்பாக முச்சக்கரவண்டியின் உரிமையாளர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பம் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.

புதுவருடத்தை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் சட்டவிரோதமாக பியர் கடத்தப்படுவதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.