Home புதினங்களின் சங்கமம் லண்டனில் மருத்துவர் ஜெயசங்கர் கொரோனா நோயாளிகள்: அதிலும் தமிழர்களுக்கு அபார சேவை !

லண்டனில் மருத்துவர் ஜெயசங்கர் கொரோனா நோயாளிகள்: அதிலும் தமிழர்களுக்கு அபார சேவை !

லண்டனில் ஈழத் தமிழ் மருத்துவரான, ஜெயசங்கர் அவர்கள் கொரோனா தொற்று நோயாளிகளை மிக அபாரமாக கையாண்டு வருவதாக அறியப்படுகிறது. யாழ் பரியோவான் கல்லூரி பழைய மாணவரான இவர், தற்போது வெம்பிளியில் உள்ள நோத் விக் பார்க் வைத்தியசாலையில் வேலைபார்த்து வருகிறார்கள். ஹரோ பகுதி என்பதால் அங்கே பல நூறு தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில். கொரோனாவல் பாதிக்கப்பட்ட பல தமிழர்களுக்கு இவர் மேலதிக உதவிகளை செய்து வருவதோடு. சொந்த மொழியான தமிழில் பேசி, தமிழர்கள் மீது அதிக கவனம் எடுத்து வருவது, பல தமிழர்களுக்கு மன நிம்மதியான விடையமாக உள்ளது.

எங்கள் மொழி பேசும் ஒரு மருத்துவர் அருகில் இருக்கிறார் என்ற மன தைரியத்தை பல தமிழ் நோயாளிகளுக்கு கொடுத்துள்ளார் மருத்துவர் ஜெயசங்கர். இவரால் பல நூறு வேற்றின மக்கள் பயன் அடைந்தாலும். இவர் இந்த இக்கட்டான நிலையில், தனது சுயநலம் பாராது கொரோனாவால் பாதிக்கபப்பட்ட பல தமிழர்களுக்கு உதவி வருகிறார். அத்தோடு நின்று விடாமல், வீட்டில் இருக்கும் அந்த கொஞ்ச நேரத்தில் கூட, தொலைபேசியூடாக பல தமிழர்களுக்கு, மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இவர்கள் போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களை, மக்களே பாராட்டாமல் இருந்து விட முடியாது.

இன்றைய பிரித்தானியாவின் தூண்கள் இவர்கள், அது போக தமிழர்கள் என்ற பெருமையை உலகிற்கு பறை சாற்றி நிற்பவர்களும் இவர்களே. எனவே இவர்கள் போன்ற அனைத்து மருத்துவர்களையும் நாம் நினைவு கூர்வதோடு, அவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கவும் நாம் தயங்கக் கூடாது. அந்த வகையில், அதிர்வு இணையமும் மருத்துவர் ஜெயசங்கரை வாழ்த்தி நிற்பதோடு, அவர் பாதுகாப்ப்பாக இருக்கவேண்டும் என்றும் வேண்டி நிற்கிறது.