புதினங்களின் சங்கமம்

இலங்கையில் 4 வது கொரோனா நோயாளியும் சற்று முன் மரணம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு ஐடிஎஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த நான்காவது நபர் இவராவார்.