கோரோசனை மருந்தை கொரோனா மருந்து என ‘எடிட்’ செய்த விசமிகள்!!! அவதானம் மக்களே!! (Photos)
இந்தப் பதிவு தியாகராஜா சுதர்மன் என்ற சித்த வைத்திய நிபுணரின் பேஸ்புக் பக்கத்தில் அவரால் பதிவு செய்யப்பட்டதை அப்படியே இங்கு தந்துள்ளோம்… தயவு செய்து விசமிகளின் நடவடிக்கையால் குறித்த மருந்தை தவறாக மக்கள் பாவிப்பதை தடுப்பதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பு வாசகர்களே!!
முற்றும் தவறான தகவல் – கோரோன மாத்திரை 1914இல் ஒரு புத்தகத்தில் உள்ளது என்பது முற்றிலும் தவறான தகவல். அதில் “கோரோசன” மாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது. யாரோ விசமிகள் photoshop மூலம் “ச” அழித்துள்ளார்கள். சித்த மருத்துவத்தில் கொராணாவுக்கென தேரடியாக மருந்துகள் எதுவும் இல்லை.