புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனா அபாயம்!! கனடாவில் இலங்கைத் தமிழன் செல்வராசா செய்த நம்பமுடியாத வேலை!! நடந்தது என்ன?

இத்தாலி தொடர்பில் இலங்கை பத்திரிகைகள் வெளியிட்டது போலி செய்தியா?

ஸ்ரீசெல்வராசா என்கிற ஒரு இலங்கைத் தமிழன் இவர். ‘லிட்டில் இந்தியா’ என்கிற உணவகம் ஒன்றை டொரண்டோ நகரில் நடாத்திவரும் இவரின் உணவகம் அண்மையில் நம்பமுடியாத செய்தியொன்றைப் பிரசுரித்தது.

அதாவது, கொரோனா தொற்றினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட (மற்றும் வருமானம் இழந்த) எவரும் வந்து இலவச உணவுகளைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டதே இந்த அறிவித்தல். மிகவும் நெகிழ்ச்சியான இந்தச் செய்தி சமூகவலைத் தளங்களில் எல்லா சமூகத்தினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சி.பி.சி கனடா செய்தியில் கூட இவ்வறிவித்தல் முன்னிலை வகித்திருக்கிறது.

தினமும் நான்கு அல்லது ஐந்து பேர்வரை இலவச உணவுக்காக வரலாம் என்று எதிர்பார்த்த உணவகம், எதிர்பாராத வகையில் தினமும் நூறு பேர்வரை வருவதைக் கண்டும்கூட தன் சேவையை நிறுத்தவில்லை. இந்தச் சேவையை ஊக்குவிக்க சிறு நிதி உதவிகள் செய்வதாய் பல தனி நபர்கள் உணவகத்தின் வங்கி விபரங்களை பகிரங்கமாய் கோரும் (முகநூலில்) அளவுக்கு இச்சேவை கனேடியர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இலவச உணவு தேடி இங்கே செல்வோர் எவ்விதமான கேள்விகளாலும் துளைக்கப்படாதமை அங்கு செல்வோருக்கு எவ்வித மனச் சங்கடங்களையும் தராமல் உணவைப் பெற்றுச் செல்ல உதவுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

தக்க சமயங்களில் மற்றவர்களுக்கு செய்யப்படும் உதவிகள் பெரிது. அதிலும் பணத்துக்காக முதலிடப்பட்டு இயங்கும் ஒரு உணவகம், பணம் எதையும் எதிர்பாராமல் வயிறார சாப்பாடு கொடுப்பது உண்மையில் மிகப்பெரிய விடயம்.

ஸ்ரீ செல்வராசா என்கிற இந்தத் தமிழரையும், இவரின் குடும்பத்தினரையும் மனதார வாழ்த்துவோம் ?

(புகைப்படங்கள் இணையத்தளங்களில் பெறப்பட்டவை)

Image may contain: 1 person, sitting and indoorImage may contain: 5 people, people standing and indoorImage may contain: text and outdoor