யாழில் திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு பொலிசார் அச்சுறுத்தல்!! (Photos)
திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை
பூட்டுமாறு பொலிஸ் அறிவுறுத்தல்
ஊரடங்கு நேரத்தில் கடைகளைத் திறக்குமாறு கூறிய வடக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு தங்களுக்கு கிடைக்காததால் கடைகள் திறக்க அனுமதிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இன்று காலை திறக்கப்பட்டிருந்த கடைகளை பூட்டுமாறு பொலிஸார் அறிவுறுத்தியதையடுத்து பூட்டப்பட்டுள்ளன.
திறக்கப்பட்ட கடைகளைத் தேடி மக்கள் அலைவதை அவதானிக்க முடிகின்றது.
இதே வேளை திருநெல்வேலிச் சந்தைக்கு அருகாமையிலும் சுகாதாரப்பரிசோதகர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் மரக்கறி வியாபாரம் செய்த வியாபாரகளை பொலிசார் துரத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை ஆளுநரின் கட்டளைக்கு பொலிசார் அடிபணியாமல் செயற்படுகின்றார்களா?? எனவும் பத்திரிகையில் வந்த செய்திகளைப் பார்த்த பின்னர் விவசாயப்பொருட்களைக் கொண்டு வந்த நமக்கு இவ்வாறான அநியாயத்தை பொலிசார் செய்கின்றார்கள் எனவும் விவசாயிகள் மற்றும் கடைக்காரர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.




