புதினங்களின் சங்கமம்

மிருசுவில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி விடுதலை!!

மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியான சுனில் ரத்நாயக்கவிற்கு இன்று (26) ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டதை அடுத்து அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி யாழ். மிருசுவில் பகுதியில் 8 பேரை கொலை செய்ததாக சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட 05 இராணுவ வீரர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில் நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் போதுமானளவு சாட்சி இல்லாத காரணத்தால் அவர்கள் விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்