புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (27.03.2020)

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்கவேண்டி வரும். அடுத்தவர்களை குறைக்கூறிக் கொண்டிருக்காமல் உங்களைமாற்றிக் கொள்ளப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சோர்வு வந்து நீங்கும்.

மிதுனம்: ஆன்மிக பெற்றோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரைபார்ப்பீர்கள். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். இனிமையான நாள்.

கடகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். திடீர் பணவரவு உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மரியாதைகூடும் நாள்.

சிம்மம்: கணவன் – மனைவிக்கு அன்னோயம் பிறக்கும் திடீர் பணவரவு உண்டு. புதுமுடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாளாக பார்க்க வேண்டிய இடத்தை பார்க்க நேரிடும். வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதைதெரியும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துபோவது நல்லது. முயற்சிகள் தாமதமாகும் நாள்.

துலாம்: பிள்ளைகள் உங்கள் அருமையை புரிந்துகொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்புகிட்டும். சொத்து சிக்கலில் ஒன்றுதீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள்.

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை எல்லோரும் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்துநீங்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். வியாபாரத்தில் புதுஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர்யோகம் கிட்டும் நாள்.

மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.