யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு முள்ளிவாய்க்கால்?? ஏ.9 வீதி மூடப்பட்டது!!
மற்றுமொரு முள்ளிவாய்க்கால் அழிவு யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ளதா???
ஆனையிறவிலும் பூநகரியிலும் யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயில் யாரும் உள்ளே நுழைய முடியாது… வெளியேறமுடியாது தற்போது சீல் வைக்க்பபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு கொரோனா நோயாளி அடையாளப்படுத்தப்பட்டுள்ளதே காரணம். கொழும்பு மற்றும் கம்பஹா, திருகோணமலை போன்ற இடங்களில் வைரஸ் தொற்று இருந்தவர்கள் காணப்பட்டிருந்தாலும் குறித்த மாவட்டங்களுக்குள் நுழையவோ வெளியேறவோ தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் பிரதேசசபை தவிசாளர் ஒருவரின் சகோதரி பிரான்சில் கொரோனா தொற்றால் மரணம்!!
யாழ்ப்பாணத்தில் கொரோனாவால் பெரும் அழிவு ஏற்பட்டாலும் தென்பகுதி கவனத்தில் பெரிதாக எடுக்காது என்பதை தென்பகுதி உயர்மட்டங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் தென்பகுதி நடவடிக்கைகளை அவதானித்து எதிர்வு கூறுகின்றார்கள். இத்தாலியின் நிலை யாழ்ப்பாணத்திற்கு நடக்கப் போவதான சூழ்நிலை உருவாகியுள்ளது.
சுவிஸ் பாஸ்டரால் யாழ்ப்பாணத்தில் ஏராளமானவர்கள் தொற்றுக்குள்ளாகி இருப்பார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி அறிய முடிகின்றது. தற்போது கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருப்பவர் தாவடிப் பகுதியைச் சேர்ந்த ஒரு கட்டட ஒப்பந்தகாரர் சிவானந்தன். இவர் குறித்த பாஸ்டருடன் அரை மணி நேரமே ஒன்றாக இருந்துள்ளார். அவருக்கே இந்த நிலை என்றால் குறித்த பாஸ்டர் பல மணி நேரம் மண்டபத்தில் இருந்து ஆராதனைகள் செய்த போது இருந்த மக்களில் பெருமளவானவர்களுக்கு இந்த நிலை இருக்கும்.
அத்துடன் சிவானந்தன் தானாகவே சென்று வைத்தியசாலையில் பரிசோதித்ததற்கு அவருக்கு நன்றி செலுத்தப்பட வேண்டும். அவரது புகைப்படத்தை தவறாக சித்தரிக்காது அவரை வாழ்த்தி அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்தல் வேண்டும். ஏனெனில் அவரால் மேலும் பலர் நோய் தொற்றுக்கு இலக்காகாமல் தப்பியுள்ளார்கள். இதே வேளை சிவானந்தனுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், அயலவர்கள் சுய தனிமைக்கு உள்ளாகி தங்களைத் தாங்களே பாதுகாத்து நோய் சந்தேகம் இருந்தால் உடனடியாக வைத்தியசாலை செல்லுங்கள்.
குறித்த பாஸ்டர் சற்குணராசாவுடன் தொடர்பில் இருந்தவர்களும், தொடர்பில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் சுய தனிமைக்கு உள்ளாகுங்கள்….. உங்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் தயவு செய்து வைத்தியசாலைக்கு சென்றுவிடுங்கள். யாழ்ப்பாணத்தை நரகலோகமாக்காதீர்கள். நோயுடன் நீங்கள் ஊடரங்கு தளர்த்தப்பட்ட பின்னர் தெருவுக்கு சென்று பொருள் கொள்வனவு என்ற போர்வையில் நோய் பரப்பிகளாக செயற்படாதீர்கள். ஏனெனில் யாழ்ப்பாணத்தார் தங்களுக்கு தாங்கள் காரிய வெகுளிகளானவர்கள்…. பெண் பிள்ளை பெற்றவுடனேயே சீதனத்துக்கு பொருள், பணம் சேர்ப்பவர்கள். இவ்வாறான நெருக்கடி நிலை ஏற்பட்டால் பொருட் கொள்வனவுக்காக எந்தவித நோய் பாதுகாப்பு நிலைகளையும் எடுக்காது கூட்டமாக கடைகளில் அலை மோதுவார்கள். அவர்களுக்கு தயவு செய்து உங்கள் தொற்றைப் பரப்பிவிடாதீர்கள். அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது……..
குடாநாட்டு மக்களே!!! உங்களுக்கு நோய் வந்தால் எம்மைக் காப்பாற்ற அரசாங்கம் இருக்கின்றது தானே… டொக்டர்மார் இருக்கின்றார்கள்தானே… ஆசுப்பத்திரி இருக்கின்றது தானே என்று நீங்கள் கவலையீனமாக உங்களைக் கடவுளாளும் காப்பாற்ற முடியாது. காரணம் மக்கள் நலனில் அக்கறை கொண்ட வல்லரசுகளே கொரோனாவால் தடுமாறி நிற்கின்றதை நீங்கள் அறிய வேண்டும்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக நீங்கள் பாத்திருந்தால் அதன் கொடூரம் உங்களுக்கு விளங்கும். வைத்தியர் என்பர் கடவுள் அல்ல… அவரும் சாதாரன மனநிலை கொண்ட ஒரு மனிதன். முதலில் அவர்களும் தங்களைத் தாங்கள் பாதுகாக்கவே முற்படுவார்கள்.
நான் அறிந்த அளவில் பெருமளவான வைத்தியர்களும் சுகாதாரத்துறையினரும் மேலான சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை இன்று கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று அறிந்தவுடன் சுகாதாரத்தரப்பைச் சேர்ந்த சிலர் தமது கடமைக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் 20 பேர் பராமரிக்கும் வசதி கொண்ட வைத்தியசாலையில் 2 ஆயிரம் பேர் அனுமதிக்கும் போது எவ்வாறான நிலை உண்டாகும் என்பதை சொல்ல தேவையில்லை.
முள்ளிவாய்க்காலில் உங்களில் பலர் நேரில் பார்த்த சில விளைவுகளை மீண்டும் பார்க்க வேண்டி வரும்.
மக்களை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஊரடங்கு சட்டம் சிறந்த செயற்பாடு என்றாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக அந்தச் சட்டம் சில மணி நேரம் தளர்த்தப்படல் வேண்டும்.
அந்த நேரத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு விநியோகம், மருந்து விநியோகம் போன்றவற்றை திட்டமிட்டு சன நெருக்கமில்லாது விநியோகிப்பதற்கு வடக்கு அதிகாரிகள் சிறந்த திட்டமிடலை மேற்கொண்டு செயற்பட வேண்டும்.
ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் மக்கள் கண்டபடி எழுந்தமானமாக வேடிக்கை பார்க்க திரிவதை நிறுத்துவதற்கு பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மூடப்படல் வேண்டும். அந்த நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளை செய்பவர்களுக்கு மாத்திரம் வாகனங்களுக்காக எரிபொருள் விநியோகம் செய்ய வேண்டும்.
பொதுமக்களை வீட்டுக்குள் வைத்திருப்பதற்காக இணைய சேவைகளை குறித்த நிறுவனங்கள் சில வாரங்களுக்காகவது இலவசமாக வழங்கினால் பெருமளவானவர்கள் வீடுகளுக்குள் இருப்பதற்கு வழிவகுக்கும்.
வீதிக்கு வீதி பொலிசாரை நிறுத்தி அலைந்து திரிபவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதனால் மற்றுமொரு முள்ளிவாய்காலை தவிர்க்க முடியும்….
(வயிற்றில் புளி கரைக்க கரைக்க இந்தப் பதிவை எழுதியுள்ளேன்…. ஆரம்பத்தில் நானும் யாழ்ப்பாணத்திற்கு கொரோனா வராது என்று அசன்டையீனமாக இருந்துள்ளேன்….. தற்போதே அதன் தாக்கம் தெரிகின்றது…. )
நன்றி
முகப்பக்கம்……

