புதினங்களின் சங்கமம்

ஆடைத் தொழிற்சாலைக்குள் புகுந்து ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் பெண்களுக்கு செய்தது என்ன? (Photos)

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் இன்றும் பணியாளர்களை வரவழைத்து உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றமையினால் அப்பகுதிக்கு சென்ற வவுனியா ஈழமக்கள் ஜனநாய கட்சியினர் அனைவரையும் உடனடியாக வீடுகளுக்கு அனுப்ப வேண்டும் என நிர்வாகத்தினருடன் முரண்பட்டமையினால் ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டது.

இன்று காலை வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் அனைத்து பணியாளர்களையும் பணிக்கு வர வேண்டும் என அழைத்த நிர்வாகத்தினர் தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

கொரனா தொற்று காரணமாக அனைத்து தனியார் மற்றும் அரச துறையினருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை அழைத்தமை ஆபத்தானது என தெரிவித்துள்ள நிலையில் அங்கு சென்ற ஈ.பி.டி.பியினர் அங்கு பணியில் இருந்த அனைத்து ஊழியர்களையும் அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என அங்கிருந்த நிர்வாகத்தினருடன் முரண்பட்டனர்.

இதனையடுத்து நிர்வாகத்தினர் நிலமையை அறிந்து உடனடியாக அனைத்து ஊழியர்களையும் வீடுகளுக்கு செல்ல அனுமதித்திருந்தனர்.

இந்நிலையில் அனைத்து ஊழியர்களும் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறியதன் பின்னர் ஈ.பி.டி.பியினரும் அங்கிருந்து சென்றிருந்தனர்.