லண்டனில் யாழ்ப்பாணத் தமிழ் குடும்பத்திற்கு கொரோனா!! வீட்டுடன் சீல் வைத்த பொலிசார்!!
லண்டன் சவுத்ஹாலில், தமிழ் குடும்பம் ஒன்று, முற்று முழுதாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். தந்தை ஒரு டாக்ஸ்சி ஓட்டுனர் என்றும். அவருக்கே முதலில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனூடாக மனைவிக்கும் அவரது 2 பிள்ளைகளுக்கும் பரவியுள்ளது.
இன் நிலையில், மொத்த வீட்டையும் பூட்டி பொலிசார் சீல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தியவசிய மருந்துகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தேவையான அனைத்து உதவிகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அவர்கள் எவரும் வெளியே செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டு உள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. லண்டனில் இதுவே முதல் முறையாக கொரோனா வைரஸ் தமிழர்களை தாக்கிய சம்பவம் ஆகும். மேலதிக விபரங்களை நாம் பெற உள்ளோம். அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.
இது இவ்வாறு இருக்க, மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளுக்கு தமிழர்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் டாக்ஸ்சி, ஊபர், போன்ற வாகனங்களை ஓட்டுபவர்கள் மிக மிக கவனமாக இருக்கவேண்டும். பயணிகள் தரும் காசு தொடக்கம். அனைத்து விடையங்களிலும் கவனமாக இருப்பது நல்லது தமிழர்களே.

