மட்டக்களப்பில் இராணுவ வீரருக்கு எப்படி கொரோனா தொற்றியது ?
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு, வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரடியனாறு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னர் பதியத்தலாவையில் படை முகாமில் கடமையாற்றியபோது கொரோனா சோதனை முகாமில் பணியாற்றியதாகவும் தற்போது கரடியனாறு வைத்தியசாலைக்கு வந்துள்ள நிலையில் அங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை
இராணுவ அலுவலகர் ஒருவர் கோரோனா வைரஸ் (COVID 19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமையை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ அலுவலகரே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
நாட்டில் நேற்று மாலை வரை 28 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இராணுவ அலுவலகரும் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

