புதினங்களின் சங்கமம்

நோயை மறைத்து வைத்திருந்தாராம்!! 11-வது கொரோனா தொற்றாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 3-வது கொரோனா தொற்றாளியுடன் ஜேர்மனுக்கு பயணித்ததுடன், அவரை அறிந்திருந்தும் தன்னை மருத்துவ மனையில் அனுமதிக்க மறுத்த 11-வது கொரோனா தொற்றாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார பணிப்பாளர் அனில் ஜயசிங்க அறிவித்துள்ளார்.

இன்று (16) இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

குறித்த 11-வது கொரோனா தொற்றாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டுமென்ற அறிவுறுத்தலை மறுத்து, தனது சொந்த வைத்தியரிடம் சென்று தனியார் வைத்தியசாலையில் தன்னை அனுமதித்து பரிசோதனை செய்து கொண்டார்.

இறுதியில் மிகத் தாமதமாக தன்னை அங்கொடை ஐடிஎச்சில் மனுதிக்க சம்மதித்திருந்தார். – என்றார்.

தனியார் வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.