புதினங்களின் சங்கமம்

இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவர்களை பிடிக்க களமிறங்கும் புலனாய்வு பிரிவு!!

இத்தாலியில் இருந்து மார்ச் முதலாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை நாடு திரும்பியவர்களை தேடி களமிறங்கவுள்ள புலனாய்வுப்பிரிவு.

இதுவரை நாடு திரும்பியவர்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படாதவர்களை தேடி இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் , இந்த நடவடிக்கைக்கு இராணுவம் பயன்படுத்தப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தாலி நாட்டிலிருந்து வந்தவர்களாலேயே இலங்கையில் அதிக அளவில் வைரஸ் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.