யாழ் போதனா வைத்தியசாலை முன் உள்ள ஒமைக்ஸ் உணவகத்தில் அழுகிய இறைச்சி கறி!!
யாழ்.நகரில் வைத்தியசாலைக்கு முன் வீதீயில் அமைந்துள்ள உணவகம் தொடர்பாக பேஸ்புக்கில் KS Jeyakirushna என்பவர் பதிவு செய்திருந்த தகவலை இங்கு நாம் அப்படியே தந்துள்ளோம்….. சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு
#தயவு_செய்து_உணவகங்கள்_இது_போன்ற
#கீழ்த்தரமான_வேலைகளைச்_செய்ய_வேண்டாம்
————————————————————————–
யாழ்.நகரில் வைத்தியசாலைக்கு முன் வீதீயில் அமைந்துள்ள உணவகம் #Omex_hotel..
இன்றையதினம் இரவுச் சாப்பாட்டினை அந்த உணவகத்திலிருந்து பெற்றுக் கொண்டோம்..
அவர்களது உணவுப் பொதியில் #பழுதடைந்த_இறைச்சி மற்றும் #பழுதடைந்த_கறி உள்ளடங்கலாக கொத்துரொட்டிப் பார்சலை அளித்திருந்தனர்…Hostel க்கு வந்து பார்சலைத் திறந்து மணம் தாங்க முடியாமல் மீண்டும் உணவுப் பொதியினைக் காவிக் கொண்டு அந்தக் கடைக்கு விரைந்தோம்..
சம்பவத்தைக் கூறிய பொழுது அங்கிருந்த உரிமையாளர் மற்றும் உணவுத்தயாரிப்பாளர்கள் அதனைச் சுவைத்துப் பார்த்து விட்டு அதுவே இறைச்சியின் இயற்கையான மணம் என்று வாதிட்டனர்…(ஏனென்டா நாங்க இறைச்சியே சாப்பிட்டதில்லத் தானே….)
இருப்பினும் இது தொடர்பில் நாங்கள் PHI ஒருவரின் உதவியை நாட முற்பட்ட போதே..அவர்கள் தமது முதலாவது மன்னிப்பைக் கோரினர்..அதன் பின்னர் உரிமையாளர் மற்றும் சமையல்த் தயாரிப்பாளருக்கிடையில் நடைபெற்ற வாய்த்தர்க்கத்தில் #கறி_பழுதடைந்தது_தெரிந்தும்_அது_வேண்டுமென்றே_விற்பனை_செய்யப்பட்டது_என்பது_தெரிய_வந்தது…
நான் ஏன் இவ்வளவற்றையும் பதிவிடுகிறேன் என்றால்…இது வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள உணவகம்..நோயாளர்களைப் பார்வையிடச் செல்பவர்கள் கூட அவசரத்தில் உணவகங்களில் சாப்பாட்டைப் பெற்றுக் கொள்ளக் கூடும்..அத்துடன் முதியவர்கள், இயலாதோர் எனப்பலரும் இவர்களை நாடக் கூடும்..இதனைச் சாதகமாகக் கொண்டு இவ்வாறு உணவக உரிமையாளர்கள் கேவலமான வேலைகளைச் செய்வது கண்டிக்கத்தக்கது…
காசு தந்து சாப்பிட வாறவங்களுக்கு ஏன்டா இப்பிடிப் பண்றீங்க…
#இவங்கட_கேவலமான_வேலைய_இயன்றளவு_மக்கள்_மத்தியில்_கொண்டு_சென்றாலே #இனிமேல்_இவ்வாறான_தவறுகள்_இடம்பெறாது_தடுக்கலாம்.
#மக்கள்_நலனுக்காய்ப்_பகிருங்கள்..??

