புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாப் பிரதமரின் மனைவிக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!!

கனடியப் பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கனடியப் பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
குறித்த கொரோனா வைரஸதால் தனக்கு எந்தப்பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், நாளை நாடு முழுவதும் உள்ள தலைவர்களுடன் பேசவுள்ளேன். நாட்டு மக்களை எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்தும், பொருளாதாரத்தை காப்பது குறித்தும் பேசவுள்ளேன் என அவர் ருவிட் செய்துள்ளார்.அதேவேளை, வைத்தியர்களின் ஆலோசனைப் படி நடக்கின்றேன். நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையால், வீடியோ வழியாக அனைவருடனும் தொடர்புகொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.