Home புதினங்களின் சங்கமம் இன்று அதிகாலை கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றவர்கள் விபத்து- 6 பேர் உயிரிழப்பு (Photos)

இன்று அதிகாலை கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றவர்கள் விபத்து- 6 பேர் உயிரிழப்பு (Photos)

ஹம்பந்தோட்டை – லுணுகம்வெஹெர பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு, மூவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை பயணித்த சிற்றூர்தியொன்று வீதியிலிருந்து விலகியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கதிர்காமத்திற்கான யாத்திரைக்கு சென்றுக்கொண்டிருந்த சிற்றூர்தியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Image may contain: one or more people and carImage may contain: tree and outdoorImage may contain: car and outdoorImage may contain: outdoorNo photo description available.Image may contain: one or more people and outdoorImage may contain: tree, car, outdoor and natureImage may contain: outdoor