யாழில் போலிப் பேராசிரியரின் திருவிளையாடல்கள்?? நடப்பது என்ன?
இந்தப் பதிவு முகப்புத்தகத்தில் வெளியாகிய பதிவு ஆகும்.
20 வருடங்களுக்கு முன் கொழும்பில் ஒரு 10×10 அடி அறையில் இயங்கி வந்த ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் பல்கலைக்கழகம் பலருக்கு டாகடர் பட்டம் வழங்கி வந்தது யாவரும் அறிந்ததே. அண்மையில் International Business University of Costa Rica என்றோரு நிறுவனம் இலங்கையில் பட்டங்கள் வழங்கி வந்துள்ளதுடன் அண்மையில் அதன் இணைப்பாளராக இருப்பவருக்கு கௌரவ பேராசிரியர் பட்டமும் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. போதாக்குறைக்கு அவருக்கு வாழ்த்து விளம்பரம் வேறு.
கல்வியே எமது சொத்து. அதன் மூலமே இழந்த பொருளாதாரத்தையும் அதன் மூலம் எமது அரசியல் உரிமைகளையும் பெறமுடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவன் நான். இப்படியானவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா போன்று போலிப் பல்கலைக்கழகங்கள் மூலைக்கு மூலை முளைவிடக்கூடும்.


