Vampan memesபுதினங்களின் சங்கமம்

•ஓடுங்கடா! ஓடுங்கடா! பாராளுமன்றத்தைச் கலைச்சுட்டாங்களாம்டா!

•ஓடுங்கடா! ஓடுங்கடா!
பாராளுமன்றத்தைச் கலைச்சுட்டாங்களாம்டா!

இத்தனை வருடமும் பாராளுமன்றம் என்ற சாக்கடையில் உழன்ற பன்னிகள் யாவும் இனி ஒரு மாதத்திற்கு ஊருக்குள்ள வரப்போகுதுகள்.

அதில் இத்தனை காலமும் நீண்ட உறக்கத்தில் இருந்தவரும் எழும்பி வரப்போகிறார்.

ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்று கடந்த தேர்தலில் உறுதி தந்தவர் இந்த தேர்தலுக்கு என்ன உறுதி தரப்போகிறாரோ தெரியவில்லை.

அவருக்கு தேர்தல் வந்தால் உஷாராக வருவார். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவருக்கு காது கேட்காது. கண் தெரியாது.

சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை பற்றிக் கேட்டால் கையில் திறப்பு இல்லை என்பார்.

வேலை கேட்டால் அப்புறமம் தீர்வு பெற முடியாது போய்விடும் என்பார். ஆனால் தனக்கு பதவி , பங்களா மற்றும் சொகுசு வாகனம் கேட்டு வாங்குவார்.

சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யவில்லை
காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கவில்லை
இடம் பெயர்ந்தோர் அனைவரும் மீள் குடியேற்றம் செய்யவில்லை.
வாக்குறுதி அளித்தபடி ஒரு வருடத்தில் தீர்வும் பெற்றுத் தரவில்லை.
அப்புறம் எந்த முகத்தோட மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்?

ஆனால்
தமிழ் மக்களிடம் பிஞ்ச செருப்பு இருக்கிறது
வாசற் படலையில் விளக்குமாறு இருக்கிறது.
வேலிப் பூவரசு மரத்தில் நல்ல கதியால் இருக்கிறது.
வாருங்கள். இம்முறை நல்ல வரவேற்பு உங்களுக்கு காத்திருக்கிறது!

நன்றி

Balan Chandran