Vampan memesபுதினங்களின் சங்கமம்

சப்பாத்துடன் ஓமந்தை அம்மன் கோயில் பிரதேசத்துக்குள் நுழைந்த செல்வம் அடைக்கலநாதன்!! (Photos)

வன்னியில் உள்ள இந்துக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கத்திற்காக கிறிஸ்தவரான செல்வம் அடைக்கலநாதன் கோவில்களுக்கு நிதி உதவி செய்யும் போர்வையில் சப்பாத்துக் காலுடன் இந்துக் கோவில்களுக்குத் திரிவதாக சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் உருவாகியுள்ளன. ஒமந்தை காயாங்குளம் கல்வெட்டை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு செல்வம் அடைக்கலநாதனும் அவரது பாதுகாவலர்களும் சப்பாத்துக்காலுடன் சென்ற புகைப்படம் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க கம்பெரிலியா என்ற பெயரில் போட்ட எலும்புத்துண்டை தனது பணம் என்ற நினைப்பில் செல்வம் இவ்வாறு கோவிலுக்கு கொடுப்பது போல் கொடுத்து சப்பாத்துக் காலுடன் சென்று கோவிலின் புனிதத்தை கெடுத்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

Image may contain: one or more people, people standing, outdoor and natureImage may contain: one or more people, sky, outdoor and nature