Vampan memesபுதினங்களின் சங்கமம்

சிவஞானத்தின் பிள்ளையில் சுரக்கும் பசைக்காக பச்சைப் பொய் சொன்ன யாழ் ஆயர்!!

 

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனை அவர் மூலமாக தனது கிறீஸ்தவ அமைப்புக்கும் ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பச்சைப் பொய்யாக புகழ்ந்து பேசி காரியம் சாதிக்க முயல்கின்றாரா யாழ்ப்பாண ஆயர் என சமூகவலைத்தளங்களில் காரசாரமான கருத்துப் பதிவுகள் வெளியாகிவருகின்றது. சிறிதரன் அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதிகளை தன்னுடைய சொந்த நிதியி்ல செலவு செய்வதாக யாரும் என்ன வேண்டாம் என சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பாவின் செல்வாக்கில் பெரும் பணப் புழக்கத்தில் இருக்கும் கிறீஸ்தவ தேவாலயங்களுக்கு எதற்காக சிறிதரன் நிதி ஒதுக்கீடு செய்தார் என்பது ஒரு புறம் இருக்க யாழ்ப்பாணத்தில் வேறு எந்த ஒரு இந்துக் கோவில்களுக்கோ அல்லது பிராமணக்குருக்கள்மாரின் வளர்ச்சிக்காகவோ சிறிதரன் எந்தவித உதவியும் செய்யவில்லை என இந்துக்கள் சார்பில் சிறிதரனுக்கு கண்டனங்கள் சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளன.

கிறீஸ்தவனான சுமந்திரன் கிறீஸ்தவ ஆலயங்களுக்கு ஐரோப்பாவின் உதவியுடன் பெரும் நிதிவளங்களைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டு இந்துக்களை கிறீஸ்தவர்களாக மதம்மாற்றும் பணியில் ஈடுபடுத்தும் வேலையைச் செய்து கொண்டும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக்களின் வாக்குகளை சுவீகரிக்கும் நோக்கில் பல திட்டங்களை செயற்படுத்திக் கொண்டும் இருக்கும் போதும் சிறிதரனும் கிறீஸ்தவர்களை குறி வைத்து அவர்களின் வாக்குக்காக பொய் வேசம் போடுகின்றார் என சமூகவலைத்தள வாசிகள் கருத்து பதிவிடுகின்றார்கள்.

No photo description available.

 

Image may contain: 1 person