புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் யாழ் நீர்வேலிப் பெடியன் கொள்ளையன் மீது அதிரடித் தாக்குதல்!! (Video)

புலம்பெயர்ந்தவர்களின் சமூகவலைத்தளம் ஒன்றில் இந்த தகவல் வீடியோவுடன் பதியப்பட்டுள்ளது. அதனை நாம் இங்கு அப்படியே தந்துள்ளோம்…
ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பார்கள்… அது போல தமிழர் கடை ஒன்றில் துப்பாக்கியோடு புகுந்த நபர் ஒருவர் அதனை காட்டி மிரட்டி, கல்லாப் பெட்டியில் இருந்து காசை எடுத்துக்கொண்டு ஓட முற்பட்டுள்ளார். காசை எண்ணி எடுக்கும் வேளை அவர் கவனம் அந்த கல்லாப் பெட்டிமேல் இருப்பதை கண்ட கடையில் வேலைசெய்யும் ஈழத் தமிழர். மின்னல் வேகத்தில் அவர் கள்வன் கையில் இருந்த துப்பாக்கியை சினிமா ஸ்டைல் பாணியில் பிடுங்கியதுடன் போதாக்குறைக்கு , 2 காட்டிக் காட்டியதை அடுத்து. கள்வன் வேறு வழியின்றி, தப்பினால் போதும் என்று ஓடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளான். விரைந்து வந்த பொலிசார் திகைத்துப் போனார்கள். லண்டனுக்கு வந்து 6 மாதமே ஆணா இந்த நீர்வேலிப் பெடியனின் துணிச்சலை என்னவென்று பாராட்டுவது … பொலிசாரும் அவன் துணிச்சலைப் பாராட்டியுள்ளார்கள்.