புதினங்களின் சங்கமம்

யாழ் பருத்துறையில் புடவைக்கடைக்குள் கஞ்சா வியாபாரம் செய்த முஸ்லீம் முதலாளி கைது!!

யாழ்.பருத்துறை- மந்திகை பகுதியில் புடவை விற்பனை நிலையத்திற்குள் நடாத்தப்பட்டுவந்த கஞ்சா வியாபார நடவடிக்கையினை கண்டுபிடித்த பொலிஸாா், குறித்த விற்பனை நிலையத்தின் உாிமையா ளரான முஸ்லிம் வா்த்தகரை கைது செய்துள்ளனா்.

வெளியே புடவை விற்பனை நிலையமாகவும், உள்ளே கஞ்சா விற்பனை நிலையமாகவும் இயங்கிவந் த குறித்த நிலையம் தொடா்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த விற்பனை நிலையம் இன்று மாலை முற்றுகையிடப்பட்டு,

விற்பனை நிலையத்தின் உாிமையாளரான முஸ்லிம் வா்த்தகா் கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை பருத்துறை பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.