யாழ் மானிப்பாயில் 92 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது!! கடத்தியவர்கள் யார்?
மானிப்பாய் மரதனாமடு உடுவில் பகுதியில் வைத்து 92 கிலோ கிராம் பெறுமதியான கேரளா கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினர் நேற்று (12) அதிகாலை 4.30 மணி அளவில் மேற்கொண்ட வீதி சோதனை நடவடிக்கையின் போதே இந்த போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதை பொருளும் டிப்பர் வாகனமும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா போதை பொருள் தொடர்பில் இன்றைய தினம் (13) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் விளக்கம் அளிக்க உள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

