இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

இந்தியாவில் குடியுரிமை கேட்டு போராடிய மாணவிகள் பிடிக்கப்பட்டு பிறப்புறுப்புக்கள் மீது தாக்குதல் (Video)

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணியில் போலீஸார் அராஜகம், மாணவ, மாணவியரின் பிறப்புறுப்பின் மீது லத்தியால் தாக்குதல் நடத்தியதால் மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் பல்வேறு அமைப்பினரால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜகவின் சார்பில் விளக்கக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கடந்த 2-ஆம் தேதி மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராகவும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது, இந்த போராட்டத்தைப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 30/01/2020 அன்று ஜாமியா பகுதியில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு வருகை தந்த ராம் பகத் கோபால் சர்மா என்ற 19 வயது இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஷதாப் ஃபரூக் என்ற மாணவர் காயமடைந்தார். இருந்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்ல திட்டமிட்டனர். மாணவர்களின் இந்த பேரணியில் பொதுமக்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். பேரணி செல்லவிருந்த மாணவர்களைத் தடுக்கும் வகையில் போலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு இரும்பு தடுப்புகள் அமைந்திருந்தனர். அப்போது பேரணியாகப் புறப்பட்ட மாணவர்கள் போலிஸாரின் தடுப்புகளைக் கடக்க முயன்றபோது போலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலின்போது போலீஸார் மாணவிகளின் பிறப்புறுப்பு மற்றும் மார்பகங்கள் மீது லத்தியால் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளின் பிறப்புறுப்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தாக்குதலில் அடிப்பட்டு ஜாமியா சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி ஒருவர் கூறுகையில், “ஒரு பெண் போலிஸார் எனது பர்தாவை இழுத்து பிறப்புறுப்பில் லத்தியால் தாக்கினார். உடலில் பல இடங்களில் கைவைத்து போலிஸார் என்னைப் பிடித்து கீழே தள்ளினார்கள். ஐந்து முறை கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டு மிகுந்த சிரமங்களைச் சந்தித்தோம்” எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மாணவர்களை குறிவைத்த போலிஸார், இடுப்புக்குக் கீழே மட்டுமே தாக்கியுள்ளனர். நடந்த சம்பவங்களை வெளியில் விவரிக்க முடியாத வகையில் இந்த தாக்குதலை அவர்கள் மேற்கொண்டதாகவும் மாணவர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமான 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜாமியா சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில மாணவர்களுக்குக் கடுமையான உள்காயம் இருப்பதால் அவர்களை அல்ஹிபா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து சிவசங்கர் எஸ்.எஸ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் “மர்ம உறுப்பை குறி வைத்து தாக்கினார்கள்”, கேட்கும் போதே காதில் அமிலத்தை ஊற்றியதை போல் இருக்கிறது. தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவி தான் இப்படி கதறுகிறார். ஜாமியா மில்லியா மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று பிப்ரவரி 10 ஆம் தேதி காலை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக கிளம்பியுள்ளனர்.

Also read  ஹரியானாவில்  பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

பாராளுமன்றம் நடைபெற்று வருவதால் கவன ஈர்ப்பாக இருக்கும் என இந்தப் போராட்டம். ஏற்கனவே ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது மோடியின் பா.ஜ.க அரசு கடும் கோபத்தில் உள்ளது. அதனால் இந்தப் போராட்டத்தின் போது மாணவர்களை கடுமையாக கையாள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த போகிறோம் என மத்திய அரசு அறிவித்ததில் இருந்தே போராட்டம் துவங்கி விட்டது அனைவரும் அறிந்தது. 2019 டிசம்பரில் அசாமில் போராட்டம் துவங்கியது.

ஆனால் இந்தப் போராட்டம் பெரும் இயக்கமாக மாறியதற்கு ஜாமியா மாணவர்களே காரணமாகினர். 2019 டிசம்பர் 15 அன்று ஜாமியா மாணவர்கள் போராட்டத்தில் குதித்தப் போது தில்லி ஸ்தம்பித்து போனது. மாணவர்கள் மோடி அரசை திணற அடித்தனர். அதை தடுக்க அரசே வன்முறையில் இறங்கியது. அரசு பேருந்துகள், மெட்ரோ ஸ்டேஷன் போன்றவற்றில் காவல்துறையை சேர்ந்தவர்களே தீவைத்து கொளுத்தினர். அரசு சொத்துகள் சேதப்படுத்தப் பட்டன. மாணவர்கள் மீது பழியை போட்டு, அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது காவல்துறை.

பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறை புகுந்தது. வகுப்பறை, மாணவர் விடுதிகளில் புகுந்து தாக்கினர். நூலகத்தையும் விடவில்லை, படித்துக் கொண்டிருந்தவர்களையும் தாக்கினர். உச்சக்கட்டமாக மாணவியர் விடுதியில் புகுந்தனர். மின்சாரத்தை துண்டித்து விட்டு தாக்கினர். மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர். இது தேசிய செய்தியானது. இந்தியா முழுதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பாரதிய ஜனதா எதிர்பார்த்ததற்கு மாறாக, போராட்டத் தீ கடுமையாகப் பரவியது. அனைத்து எதிர்கட்சிகளும் போராட்டக் களத்திற்கு வந்தனர். மக்கள், அரசியல் கட்சிகளை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் தான் போராடுவார்கள் என அமித்ஷாவும், மோடியும் நினைத்திருக்கையில், இந்து மக்களும் பெருவாரியாக போராடினர். இது மதத்தின் பேரை சொல்லி மக்களை பிரித்து அரசியல் செய்யலாம் என்று நினைத்திருந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பேரிடியானது. இந்தக் கோபம் ஜாமியா மாணவர்கள் மீது பா.ஜ.கவுக்கு தீராமல் இருந்தது. இன்று போராட்டத்தின் போது அந்தக் கோபத்தை கொடூரமான முறையில் தீர்த்துக் கொண்டுள்ளனர்.

தில்லி மாநில போலீஸார் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். அதனால் தான் காவி யூனிபாஃர்ம் அணிந்தவர்கள் போல் நடந்துக் கொள்கிறார்கள். ஜனவரி 30 அன்று ஜாமியா மாணவர்கள் போராட்டத்தில் இருந்த போது, காவல்துறையினர் சூழ்ந்திருக்க, இந்துத்துவா தீவிரவாதி ஒருவன் கைத்துப்பாக்கியோடு வந்து மிரட்டியுள்ளான். அடுத்து துப்பாக்கியால் சுட்டு ஒரு மாணவனை காயப்படுத்தி உள்ளான்.

இதே தில்லியில் மகாத்மா காந்தியை , ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த கோட்சே சுட்டுக் கொன்ற சம்பவத்தின் தொடர்ச்சியாகத் தான் இதை பார்க்க வேண்டும். அத்தோடு நிற்கவில்லை. தொடர்ச்சியாக மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் ஒரு குற்றவாளியின் பெயர் “ராம் பக்த் கோபால்” என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்தக் கட்டம் தான், இன்று மீண்டும் போலீஸார் நடத்தியுள்ள அரச பயங்கரவாதம். இன்றைய பேரணியில் பங்கேற்ற ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர், அதுவும் அந்தரங்க உறுப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள், ஜாமியா சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிருபர்களிடம் பேசிய சுகாதார மைய மருத்துவர்கள்,”சில காயங்கள் மிகவும் கடுமையானவை. 10க்கும் மேற்பட்ட பெண் மாணவர்களுக்கு பிறப்புறுப்பில் தாக்குதல் காயம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் காயங்களைக் கண்டறிந்துள்ளோம். காயங்கள் தீவிரமாக இருப்பதால் நாங்கள் அவர்களை அல் ஷிஃபாவுக்கு மாற்ற வேண்டியிருந்தது”, என்று தெரிவித்துள்ளனர்.

Also read  காஷ்மீர் விவகாரம்- பஞ்சாபில் தடை உத்தரவு

“சில மாணவர்களுக்கு லத்திகளால் மார்பில் தாக்கப்பட்டதால் உள் காயங்களும் ஏற்பட்டுள்ளன” என்றும் கூறினர். இரண்டு ஆண் மாணவர்கள், நடந்த சம்பவம் பற்றி கூறுகையில், காவல்துறையினரால் எங்கள் பிறப்புறுப்பு பகுதி தாக்கப்பட்டது என குற்றம்சாட்டினர். சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒரு மாணவி, கூறுகையில், “நான் எனது பிறப்புறுப்பு உள்ளிட்ட வெளியில் சொல்ல முடியாத உடல் பாகங்களில் போலீசாரால் பூட்ஸால் தாக்கப்பட்டேன். ஒரு பெண் போலீஸ்காரர் என் புர்காவை கழற்றி என் பிறப்புறுப்பில் லத்தியால் தாக்கினார்,” என்று அவர் அழுதபடி கூறினார்.

“நடக்கும் சம்பவங்களை வீடியோவாக எடுப்பதை தடுக்க, போலீசார் எங்களை இடுப்புக்கு கீழே அடித்தனர்”, என்று மற்றொரு மாணவர் கூறினார். போலீசார் எங்களை பிடித்து தள்ளினர், நாங்கள் நான்கு அல்லது ஐந்து முறை கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டோம்” என்று ஒரு மாணவி கூறினார். மோடி, அமித்ஷா கும்பலின் ரத்த வெறியாட்டம் எல்லை கடக்கிறது. குஜராத் கலவரம் போல் சிறுபான்மை மக்கள் மீது அரச படையினையும், காவி படையையும் கட்டவிழ்த்து விட்டு, பீதி ஏற்படுத்தி அச்சத்தில் மூழ்கடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் ஒரு படி மேல் சென்றுள்ளார். இஸ்லாமிய மக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு நடத்தி 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது, அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிந்து நஷ்ட ஈடாக அவர்களது சொத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களிடம் இதை செய்ய முடியாது என்பதால் தான் இந்த கேவலமான செயலில் தில்லியில் இறங்கியுள்ளனர். எல்லா செயலுக்கு எதிர்வினை உண்டு என்பதை மறந்து விட்டு ஆட்டம் போடுகிறார்கள். இவர்களை விட அதிகாரம் படைத்தவர்களாக ஆட்டம் போட்ட சர்வாதிகாரிகளின் வரலாற்றை படித்தால் முடிவு புரியும். இடி அமீனும், ஹிட்லரும் பாவத்திற்கு பதில் சொல்லியே விடை பெற்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.