Vampan memesபுதினங்களின் சங்கமம்

செய்யிறதையும் செய்து போட்டு வேலை வாங்க அங்கஜனிடம் ஓடிப்போன கம்பஸ் பெடியல்!! (Video)

கண்டபடி ராக்கிங் செய்வது…… அதனுடன் சேர்த்து தமிழ்த்தேசியம், சுயநிர்னயம், சிங்கள பௌத்த பெரும்பான்மை அரசாங்கத்தின் அராஜகங்களை எதிர்த்தல் போன்ற வீராப்பு மிகுந்த செயற்பாடுகளை செய்து ஓய்ந்த பின்னர் ஓடிப்போய் அதே அரசாங்க முகவர்களின் கால்களின் கீழ் வாலாட்டிக் கொண்டு நிற்பதே யாழ்ப்பாண கம்பஸ் பெடியலின் வேலையாப் போய்விட்டது என கீழே உள்ள வீடியோவுடன் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன. அங்கஜனின் உதவியாளர் ஒருவரால் இயக்கப்படும் அதிர்வுநியுஸ் இணையத்தளம் இதே கம்பஸ் பெடியல் பெட்டைகளை அசிங்க அசிங்கமாக புகைப்படங்களையும் போட்டு பரிசுகெடுத்துவதை இவர்கள் அறியவில்லையா எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வெளியாகிவருகின்றன. யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர்கள் தங்களுக்கு வேலை வேண்டும் என கோரி அங்கஜனிடம் சரணடைந்துள்ள காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.