புதினங்களின் சங்கமம்

ஆடு, மாடுகளே சாப்பிட முடியாத உணவுகளை பயணிகளுக்கு வழங்கிய மட்டக்களப்பு ஹோட்டல்கள்!! (Photos)

பொதுச்சுகதார பரிசோதகரால் கண்டு பிடிப்பு!(தூர பிரயாணிகளுக்கு தொடர்ந்து கிடைக்கும் இடர்)

மடட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியிலுள்ள இரவு ,பகல்நேர பிரயாண பேருந்துகளின் பிரயாணிகளான பொதுமக்களின் உணவு தேவையை இலக்கு வைத்து ஓட்டமாவடி அரபா முஸ்லிம் ஹோட்டல்களின் மிக மோசமான உணவுகளும் அதன் தயாரிப்பும் அதை பேணும் முறையையும் ஓட்டமாவடி பொதுச்சுகதார பரிசோதகர்களால் சோதனையிட்ட போது கண்டறியப்பட்டு அவ் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதே நேரம் இக்ஹோட்டல்களை பரிசோதிக்கும் போது அக்கரைப்பற்று யாழ்ப்பாணம் ,வவுனியா ,கொழும்பு போன்ற பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இக்ஹோட்டல்களின் வெளித்தோற்றத்திற்கு மேல்பூச்சாக சுத்தம் போன்று காணப்பட்டாலும் உணவு தயாரிக்கும் அறைகளையும் அதற்கு பாவித்த உபகரணங்கள் பரிசோதித்த பொதுச்சுகதார உத்தியோகத்தர்களே வாந்தியெடுக்கும் அளவுக்கு அருவருப்பாக உணவுகள் காணப்பட்டது.

உணவு தயாரிப்பில் ஈடுபட்டோர் அணிந்திருந்த சாரன் ,மேல் சட்டை கழுவியே 1மாதம் மேல் இருக்கும்,ரோல்ஸ் ,மரக்கறி ரொட்டி,,,கொத்துகளுக்கு பாவிக்கும் மரக்கறி வகை ,கிழங்கு வகை அழுகி புழு வந்த நிலையில் காணப்பட்டது,உணவுப்பொருட்கள் மூடிய நிலையில் காணப்படவில்லை ,உணவுப் பொருட்களை சேமிக்க பயன்படுத்திய பாத்திரங்கள் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை அதற்கு பாவிக்கும் அகப்பைகள் கூட வெறும் ஈ மொய்த்த மேசைகளில் காணப்பட்டது,சமைப்பவர்கள் கழிவறை சென்று வந்தாலும் கைகளையும் உடல்களை சுத்தம் செய்ய கூட ஓரிடத்திலும் சவர்க்காரம் துண்டுகள் அல்லது கிருமி தொற்று தடை மருந்துக்கூட காணமுடியவில்லை.

. சுகாதாரமற்ற முறையில் உணவகத்ததை நடாத்தியமை, பாவனைக்கு ஒவ்வாத பொருட்களை விற்பனை செய்தமை போன்ற காரணங்களை அடிப்படையாகக்கொண்டு உணவுச்சட்டத்தின் கீழ் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அது மட்டுமின்றி குறிந்த ஹோட்டல்

உரிமையாளருக்கு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளதாகவும், இதற்காக ரூபாய் பத்தாயிரம் தண்டப்பணம் விதித்துள்ளதாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

குறித்த உணவகம் தொடர்பில் கடந்த காலங்களில் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையாகக்கொண்டும் அதனை திடீர் பரிசோதனைகளின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னர், இதுவரை ஆறு வழக்குகள் நீதிமன்றில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாணப் பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

 

Image may contain: one or more people and people standingImage may contain: 2 peopleImage may contain: 3 people, people standingImage may contain: foodImage may contain: 2 people, people sitting and indoorImage may contain: 1 person, sittingImage may contain: 1 person, standing and indoorImage may contain: indoor and food